புதன், 9 செப்டம்பர், 2015

ஆறுதல்

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
நரகத்தில் இடர்ப்படோம் என்ற அப்பர் பெருமானின் குரல் ஆன்ம வலிமையின் ஆற்றலை எடுத்துக்காட்டி நமக்கு ஆறுதல் தருகிறது.

தொன்மைக்குரல்

நாமார்க்கும் குடி அல்லோம். நமனை அஞ்சோம்.
நரகத்தில் இடர்படோம்,நடலை இல்லோம்.
ஏமாப்போம்.பிணி அறியோம்.பணிவோம் அல்லோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
தாம் ஆர்க்கும் குடிமை அல்லாத் தன்மையான
சங்கர நற்சங்க வெண்குழையோர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர் சேவடி இணையே குறுகினோம்.
திருநாவுக்கரசர்,திருத்தாண்டகம்
மனித உரிமை கு றித்த சைவ சமய குரவர்தம் இப்பாடல் உலகின் தொன்மைக்குரலாக ஒலிக்கிறது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நாம் யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்லர்.உயிரைப்பறித்துச்செல்லும் இயமனுக்குக்கூட அஞ்ச மாட்டோம்.நரகத்தில் வீழ்ந்துத்துன்புறும் அவலத்திற்கு ஒருநாளும் ஆளாக மாட்டோம்.பொய்ம்மை இல்லோம்.வாழும்வாழ்க்கையைப் பெருமையோடு வாழ்வோம்.எங்களுக்குப்பிணி ஏதும் வாராது.யாரிடமும் அடி பணிய மாட்டோம்.எங்கள் வாழ்வில் என்றுமே இன்பம்தான். ஒரு நாளும்
துன்பமே இல்லை.யாரிடமும் எதன் பொருட்டும் பணிந்திராத சிவ பெருமானது அடியவர்கள் நாங்கள் என்று அப்பர் பெருமான் முழங்கும் பாடல் பன்னிரு திருமுறைத்தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது.
மனிதர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைச்சொல்லும் அப்பரது பாடல்  உலகிலேயே எழுந்த முதல் மனித உரிமைச்சாசனமாகும்.